கலெக்டர் அலுவலகம் பின்புறம் மதுபோதையில் இருந்த நபர் அரசு பேருந்து சக்கரத்தில் தவறி விழுந்து தலை நசுங்கி பரிதாபமாக பலி

கலெக்டர் அலுவலகம் பின்புறம் மதுபோதையில் இருந்த நபர் அரசு பேருந்து சக்கரத்தில் தவறி விழுந்து தலை நசுங்கி பரிதாபமாக பலி
X
விபத்து
தேனி கலெக்டர் அலுவலகம் பின்புறம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மது போதையில் அப்பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்து ஒன்று வளைவில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர் தடுமாறி பேருந்தில் சக்கரத்தில் விழுந்துள்ளார் இதில் மது போதையில் இருந்த நபரின் தலையின் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேனி நகர் போலீசார் உயிரிழந்த நபரின் சடலத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் உயிரிழந்த நபரின் தலை நசுங்கி சிதைந்து கிடந்ததால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை மேலும் மது போதையில் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதாகவும் அருகில் இருந்த பொதுமக்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் தெரிவித்தனர்
Next Story