படிக்க வைக்காததால் மனைவி மாயம்,கணவர் புகார்

படிக்க வைக்காததால் மனைவி மாயம்,கணவர் புகார்
X
படிக்க வைக்காததால் மனைவி காணாமல் போனதாக குமாரபாளையத்தில் கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் வசித்து வந்தவர்கள் ஞானசேகர், 30, மோனிஷா, 18. ஞானசேகர் தனியார் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த ஆறு மாதங்கள் முன்பு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஜூலை. 12ல் மாலை 01:00 மணியளவில் ஞானசேகர் வீட்டிற்கு வந்த போது, மோனிஷா வீட்டில் இல்லை. தன் அம்மா வீட்டிற்கு போவதாக அக்கம் பக்கம் கூறி சென்றுள்ளார். அதையடுத்து, இவரது மொபைல் போனுக்கு வந்த மோனிஷா அனுப்பிய தகவலில், என்னை நீங்கள் படிக்க வைக்க மாட்டீர்கள், நான் எனது நண்பர் வீட்டிக்கு செல்கிறேன், என்னை தேட வேண்டாம் என்று கொடுத்திருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மனைவியை கண்டுபிடித்து தருமாறு, குமாரபாளையம் போலீசில், ஞானசேகரன் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன மோனிஷாவை தேடி வருகின்றனர்.
Next Story