புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையம் துவக்கி வைத்த மாவட்ட கல்வி அலுவலர்

X
Komarapalayam King 24x7 |16 July 2025 7:25 PM ISTகுமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையம் துவக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி பங்கேற்றார்.
வட்டார வள மையம் சார்பாக 15 வயதிற்குட்பட்ட எழுத, படிக்க இயலாத நபர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையம் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. பல்லக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பாக நடைபெறும் பயிற்சி மைய துவக்க விழாவில் தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மையத்தை துவக்கி வைத்து, இந்த பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசி வாழ்த்தினார். ஒருங்கிணைந்த பள்ளி உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிந்துஜா, சதீஸ்குமார், கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் காமாட்சி, அருள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
