பாசனத்திற்காக ஆத்துப்பாளையம் அணையை திறந்து வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

பாசனத்திற்காக ஆத்துப்பாளையம் அணையை திறந்து வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.
பாசனத்திற்காக ஆத்துப்பாளையம் அணையை திறந்து வைத்தார் ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா ஆத்துப்பாளையம் நீர்த்தேக்க அணையில் இருந்து பாசன வசதிக்காக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று மாலை அணையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ ,பவானி வடி நிலகோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி , உதவி செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார் , குமரேசன் , தொடர்புடைய அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர். 26.90 அடி கொண்ட இந்த அணையில் தற்போது 25.52 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணை மூலம் அஞ்சூர் , துக்காச்சி , கார்வழி , தென்னிலை , முன்னூர், அத்திப்பாளையம் , குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 19 ,480 ஏக்கர் புஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.
Next Story