கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஓ.சுகபுத்ரா வழங்கினார்

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஓ.சுகபுத்ரா வழங்கினார்
X
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெத்துரெட்டியாபட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி முனீஸ்வரி என்பவர் வீடு கட்டுவதற்காக மனு அளித்ததன் பேரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது. தமிழ்நாடு அரசு  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   மேலும்,  2025-2026 - ஆம் ஆண்டில்  2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.  சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2025-26 ஆம் ஆண்டில் இது வரை மொத்தம் 189 பயனாளிகளுக்கு வீடுகட்டுதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில்  கட்டப்பட்டுவரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியை சேர்ந்த, திருமதி முனீஸ்வரி க/பெ. விநாயகராஜ் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வீடு கட்டுவதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மனு அளித்ததன் பேரில், அதனை பரிசீலனை செய்து அந்த பயனாளிக்கு இல்லம் தேடி சென்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயன்பெற்ற திருமதி முனீஸ்வரி என்ற  பயனாளி, கூலி வேலை செய்து வரும் நாங்கள், சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், என் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கியமைக்காகவும், வீடு கட்டுவதற்கான எங்கள் கனவை நனவாக்கிய  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனது உணர்ச்சி பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Next Story