ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

X
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில், புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.46.63 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், கனிமவள நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும், பின்னர், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.75 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
Next Story

