மக்களுடன் முதல்வர் திட்டம் பல்லடத்தில் அமைச்சர் பேட்டி

X
மக்களுடன் முதல்வர் திட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் திமுக வலியுறுத்துவது என்ன தமிழக முதல்வர் தெரிவிப்பார் பல்லடம் அருகே அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அழகுமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது,அப்போது பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பில் 22ஆம் தேதி தமிழக முதல்வர் திருப்பூர் கோவில் வழி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை துவக்கி வைத்து விட்டு ரோடு சோ நடத்துவது குறித்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏராளமான மக்கள் வருகை தர உள்ளதாகவும் அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதேபோல உடுமலைப்பேட்டையில் 23ஆம் தேதி நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக வலியுறுத்துவது என்ன என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் அது குறித்து தெரிவிப்பார் என்றும் அவர் பதில் அளித்தார்
Next Story

