திமுக பிறமுகருக்கு அரிவாள் வெட்டு

மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக மாணவர் அணி அமைப்பாளரை மறித்து நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.
மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் ஒன்றியம் அதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெச். அகமது ஜும்மா. இவர் நீடாமங்கலம் ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து பழைய வழக்கு தொடர்பாக மன்னார்குடி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சவளக்காரன் என்கிற இடத்தில் முகமூடி அணிந்த நான்கு நபர்கள் மாணவரணி அமைப்பாளர் ஹெச். அகமது ஜும்மாவை மறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த நபரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஹெச்.அகமது ஜும்மாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது சம்பந்தமாக மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர் பட்டப் பகலில் திமுக மாணவர் அணி அமைப்பாளரை நடுரோட்டில் அறிவாளால் வெட்டிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story