மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
X
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் இளைஞரணி சார்பில் 59வது வார்டுக்கு உட்பட்ட எம். தங்கம்மாள்புரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் வழங்கினார். விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், வட்ட பொறுப்பாளர் மனோகர், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயகனி, பகுதி மகளிரணி அமைப்பாளர் வளர்மதி, இளைஞரணியை சேர்ந்த சிவபாலன், மாரிமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story