தேர்தல் நாடகம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலரும்,பா.ஜ.,ஐ.டி.விங் நிர்வாகி சுபாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமும் சுற்று பயணம் சென்று புகார் பெட்டி வைத்து மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார். ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் புகார் பெட்டி மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கான முடிவு என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால் மீண்டும் மக்களை ஏமாற்றும் விதமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கியுள்ளார். தேர்தலுக்காக போடும் நாடகம் தான் இது. இந்த முகாமினால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

