கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

X
குமரி மாவட்டம் பூதப்பாண்டியிலுள்ள பூதலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள் கோவில் தெப்பகுளம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர் திருவிழாவிற்க்கு முன்பு இந்ததெப்பகுளத்தை தூர் வாரிசுத்தம் செய்வதை பக்தர்களும் அற நிலைய துறையினரும் செய்து வந்தனர்கள். தற்போது சுமார் 30 வருடங்களாக இந்ததெப்பகுளம் தூர் வாரப்படாமல் குளத்தினுடைய தனித்தன்மையை இழந்து காணப்படுகிறது. இதை அறநிலைய துறை அதிகாரிகளின் பார்வைக்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நாட்களாக கழிவுகளின் பிடியில் சிக்கியுள்ள தெப்பகுளத்தில் ஏதோ விஷத்தன்மை உருவாகி இந்த குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றது. இதனால் கோவில் வளாகத்தை சுற்றிலும் துர்நாற்றமடிக்கிறது. இனியாவது அதிகாரிகள் முன் வந்து தெப்பகுளத்தின் அடி மடையை சரி செய்து ெதப் பகுளத்தின் புனித தன்மையை காக்க வேண்டும். இந்நிலையில் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சிஊழியர்கள் கொண்டு முதல் கட்டமாக செத்து மிதக்கும் மீன்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story

