சாலை விதிகளுக்கு புறம்பாக பேருந்தை இயக்கியதால் வாக்குவாதம்.
சாலை விதிகளுக்கு புறம்பாக பேருந்தை. இயக்கியதால் வாக்குவாதம். நேற்று இரவு கரூரிலிருந்து அரசு பேருந்து திருச்சி பஞ்சபூருக்கு புறப்பட்டு சென்றது. இதே போல கரூரிலிருந்து தனியார் பேருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. இந்த இரு பேருந்துகளும் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, அரசு பேருந்துக்கு வழிவிடாமல் இரண்டு முறை பேருந்து மீது மோதுவதுபோல தனியார் பேருந்து ஓட்டுனர் ஓட்டியதால் அச்சமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் சிந்தலவாடி அருகே தனியார் பேருந்தை ஓவர்டேக் செய்து நிறுத்தினார். தனியார் பேருந்து ஓட்டுனரின் செயலை கண்டித்து அரசு பேருந்து ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டு பேருந்துகளில் பயணித்த பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அரசு பேருந்து ஓட்டுனர் தனியார் பேருந்து ஓட்டுநரை இதுபோல் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பியதால் பிரச்சனை அதனுடன் முடிந்தது.
Next Story





