சுக்காலியூர் நண்பருடன் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
சுக்காலியூர் நண்பருடன் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , மன்மங்கலம் தாலுக்கா , ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்.வயது 43 . இவர் ஜூலை 14ஆம் தேதி மாலை அவரது நண்பர் திருமுருகனுடன் சுக்காலியூ செக்போஸ்ட் அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செந்தில்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த செந்தில்குமார் மனைவி பேபி வயது 44 அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த செந்தில்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story





