காமராஜர் குறித்து அவதூறு: எம்எல்ஏ கண்டனம்

காமராஜர் குறித்து அவதூறு: எம்எல்ஏ கண்டனம்
X
கிள்ளியூர்
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேடை கிடைத்தது விட்டது மைக் கிடைத்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நீங்கள் நினைத்து கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயல் காமராஜர் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள் அவர்கள் இறக்கும் பொழுது அவர் பாக்கெட்டிலே என்ன இருந்தது அவருக்கு உடமையாக சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து நான்கு ஐந்து வேஷ்டி துண்டுகளோடு மறைந்து போனவர் காமராஜர் என்பதை வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் எதை பேசுகிறோம் என்ன பேசுகிறோம் ? சுய நினைவில் தான் பேசுகிறோமா என தெரியாமல் எதை எதையோ பிதற்றி இருக்கிறார் திருச்சி சிவா. ஏசி இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என்று சொல்லியிருக்கிறார் திருச்சி சிவா. முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர். கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு நாகரீகமாக நான் என்னுடைய கண்டனத்தை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை திருச்சி சிவா அவர்கள் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
Next Story