அரசு பள்ளியில் ஸ்மார்ட் போர்டு வகுப்பறை துவக்கம்

பி.புதூர் அரசு ஊராட்சி பள்ளியில் ஸ்மார்ட் போர்டு வகுப்பறை எம்எல்ஏ துவக்கம்
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி கம்பை நல்லூர் பேரூராட்சி V புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஸ்மார்ட் போர்ட் வகுப்பறை வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2. இலட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைத்து இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே சம்பத்குமார் துவக்கி வைத்தார் பின்பு மாணவர்களிடம் கலந்துரையாடினார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story