ஆசனூரில் பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒற்றை யானை

ஆசனூரில் பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒற்றை யானை
X
ஆசனூரில் பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒற்றை யானை
ஆசனூரில் பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒற்றை யானை சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இரவு நேரங்களில் யானைகள் அடிக்கடி உணவு தேடி வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமத்துக்குள் புகுந்து விவசாய தோட்டத்தில் விளைந்துள்ள கரும்பு, வாழை, தென்னை, ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி விட்டு சென்று விடுவது வழக்கம். சில யானைகள் பகல் நேரங்களிலேயே சுற்றி திரிவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை பழைய ஆசனூரில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை முட்டி தள்ளியதில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பின்னர் உடைந்த சுவரின் வழியே பள்ளிக்குள் புகுந்த யானை சிறிது நேரம் உணவு ஏதேனும் உள்ளதா என்ற வகையில் சுற்றித் திரிந்த யானை அங்கிருந்து சென்று மகேஷ் என்பவரது கரும்பு தோட்டதிற்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சேதப்படுத்தியது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு மகேஷ் தோட்டத்தில் சென்று பார்த்த போது ஒற்றை யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தார். விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அந்த யானை அங்கே சுற்றி சுற்றி வந்தது. நீண்ட நேரமாக போராட்டத்திற்கு பின் யானை வனப்பகுதிக்குள் சென்றது. சுமார் 2 ஏக்கர் கரும்பு பயிர் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆசனூர் பகுதி மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூறும் போது வனவிலங்குகள் தொல்லைகள் இருப்பதால் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், பயிர்கள் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், சேதமடைந்த அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story