வாணியம்பாடி அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்.

வாணியம்பாடி அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை வி.எஸ்.வி தெருவில் வசிப்பவர் ரமணி இவரது வீட்டில் மேல் தளத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியில் அடுக்கி வைத்திருந்த மூட்டையினை அகற்ற முற்படும் போது, மூட்டையின் இடையில் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சடைந்து உடனடியாக இதுகுறித்து ரமணி வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார், தகவலின் பேரில், ரமணி வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மூட்டையின் இடையில் இருந்த 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு பிடித்து, அதனை வனப்பகுதியில் விடுவித்தனர்.
Next Story