மாநில போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற

X
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2025-2026-ம் ஆண்டில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது. சென்னையில் நடந்த இறுதிப்போட்டியில், சேலம் மாவட்ட அணியும், காஞ்சீபுரம் மாவட்ட அணியும் மோதின. இதில் காஞ்சீபுரம் அணியை தோற்கடித்து சேலம் மாவட்ட அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து கோப்பையை வென்ற சேலம் மாவட்ட அணி கிரிக்கெட் வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து ரெயில் மூலம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் அதன் செயலாளர் பாபுகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அணி கேப்டன் உள்பட 16 வீரர்களையும் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story

