பா.ம.க. கொடியேற்று விழா அருள் எம்.எல்.ஏ. பங்கேற்பு

X
சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 37-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அருள் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பா.ம.க. கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அன்பு மடல் ஒரு லட்சம் பிரதிகளை சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில தேர்தல் பணிக்குழுத்தலைவர் எம்.பி. சதாசிவம் வெளியிட மாவட்ட துணை செயலாளர் சிவதாபுரம் மகாதேவன் (பி.வி. மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர்) பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாடு குறித்து மாநகர, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
Next Story

