பஞ்சமாதேவியில் கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது.
பஞ்சமாதேவியில் கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் ஜூலை 16ஆம் தேதி காலை 9 மணி அளவில் பஞ்சமாதேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மெஸ் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் மண்மங்கலம் நெரூர் தென்பாகம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த செந்தமிழன் வயது 28 என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 900 மதிப்புள்ள 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல் நிலைய பினையில் விடிவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர்.
Next Story





