திராவிடர் கழகத் தலைவர் மீது அவதூறு பேச்சு: சாரங்கபாணி கைது !

X
திராவிடர் கழக துணை பொது செயலாளர் மதிவதனி குறித்து யூடியூப் வழியாக அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாரங்கபாணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மதிவதனியை குறித்த ஆபாச பேச்சு தொடர்பாக கோவை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் புகார் அளித்தார். ரேஸ்கோர்ஸ் காவல் துறை சாரங்கபாணியை ஒசூரில் இருந்து கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தது. விசாரணைக்கு பிறகு, அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடர்கின்றனர்.
Next Story

