நண்பரை காப்பாற்ற முயன்று உயிரிழந்த வாலிபர் – கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை!

நண்பரை காப்பாற்ற முயன்று உயிரிழந்த வாலிபர் – கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை!
X
நண்பனை தாக்க வந்த குழுவிடம் நண்பனை காக்க போராடியதால் வாலிபர் மரணம்.
கோவை சரவணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த பிரசன்னா (26), உணவு டெலிவரி பணியாளரும் புகைப்படக் கலைஞருமானவர். அவரது நண்பர் ஹேம்நாத் (27), திருப்பூரைச் சேர்ந்த ஒர்க்ஷாப் உரிமையாளர். இவர்கள் இருவரும் ஹோட்டல் உரிமையாளர் சௌந்தரராஜனுடன் மது அருந்திய பின்னர் சிக்கன் வாங்க துடியலூர் சாலையில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர். அப்போது 5 பேர் குழு, பிரசன்னாவை தாக்கியதில், ஹேம்நாத் அவரை காப்பாற்ற முயன்றார். இருவரும் கத்திக்குத்தில் காயமடைந்தனர். தீவிர சிகிச்சைக்குப்பின், ஹேம்நாத் உயிரிழந்தார். சம்பவம் குறித்து பிரசன்னா புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Next Story