ரயிலில் நிரந்தர சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.

ரயிலில் நிரந்தர சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
ரயிலில் நிரந்தர சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதிகரித்து வரும் பயணிகளின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் வழியாக இயக்கப்படும் ரயிலில் சேவைகள் நிரந்தரமாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ரயில் எண்.16354 நாகர்கோவில் - கச்சேகுடா (ஹைதராபாத்) (கரூர், நாமக்கல், சேலம் வழியாக) வாராந்திர எக்ஸ்பிரஸ் 19.07.2025 முதல் நிரந்தரமாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியுடன் இணைக்கப்படும். ரயில் எண்.16353 கச்சேகுடா (ஹைதராபாத்) - நாகர்கோவில் (சேலம், நாமக்கல், கரூர் வழியாக) வாராந்திர எக்ஸ்பிரஸ் 20.07.2025 முதல் நிரந்தரமாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியுடன் இணைக்கப்படும். என சேலம் கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story