கோவை: கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம் !

X
கோவை அருகே, கணவர் உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவியும் அவரின் உடல் அருகே உயிரிழந்த அதிர்ச்சியற் சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (92), ஓய்வு பெற்ற பத்திரபதிவு எழுத்தர். இவரது மனைவி சரோஜா (82). தம்பதிகள், பெரியநாயக்கன்பாளையம் அருகே மகளின் வீட்டில் வசித்து வந்தனர். சமீபத்தில் உடல்நலக் குறைவால் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது உடல் அருகே அமர்ந்திருந்த மனைவி சரோஜா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்தபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களும் ஒரே நேரத்தில் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருந்து வந்த தம்பதிகள், இறப்பிலும் பிரியவில்லை என உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Next Story

