வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்த வளர்ப்பு நாய்கள் – வீடியோ வைரல்!

X
கோவை காரமடை அருகே கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியில், சந்தை வியாபாரியான மனோஜ் (35) என்பவரது வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று நேற்று நுழைய முயன்றது. இதை கவனித்த வளர்ப்பு நாய்கள் இரண்டும், பாம்பை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து, தொடர்ந்து குரைத்ததுடன் தாக்கியும் உள்ளன. நாய்களை பார்த்து பயந்த பாம்பு பின்னர் காருக்குள் ஒளிந்தது. இதை தொடர்ந்து அருகிலிருந்த இளைஞர் ஒருவர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து வெளியே விட்டார். இந்த சம்பவம் வீட்டு சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story

