முள்ளி சோதனைச் சாவடியில் தீவிர சோதனை !

முள்ளி சோதனைச் சாவடியில் தீவிர சோதனை !
X
கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், தமிழக எல்லை பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், தமிழக எல்லை பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முள்ளி வனச் சோதனைச் சாவடியில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகப்படும் நபர்கள், வேட்டை கும்பல்களின் இயக்கம் குறித்து வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரிடம் விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story