பட்டாவை ஆன்லைனில் ஏற்றக்கோரி முற்றுகை போராட்டம்

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பனந்தோப்பு பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 1973 ஆண்டுக்கு முன்பு பேப்பர் வடிவில் பட்டா வழங்கப்பட்டது. தற்போது அந்த பட்டா ஆன்லைனில் ஏற்றாததால், நிலத்திற்கு மதிப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இ பட்டா வழங்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். இதையடுத்து காரைக்குடி தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது. ஆனால், அதற்கான மேல் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சாத்தையா, ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன் தலைமையில் பனந்தோப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக வாயிலில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

