பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள செம்மனிப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆண்டி பாலகர் திருக்கோவிலில் அடுத்த மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோவிலை சுற்றி சுத்தம் செய்யும் போது உயரமான இடத்தில் முட்புதருக்குள் தரமேல் பழமையான ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டுபிக்கப்பட்டது. இதுகுறித்து செம்மனிப்படியை சேர்ந்த பொன்.கார்த்திக் கூறியதாவது:- முட்புதருக்குள் இருந்த சிவலிங்கத்தை பார்த்தவுடன் எங்கள் கோவில் ஸ்தபதியை அழைத்து காண்பித்தோம். சோழர் காலத்து லிங்கம் வட்ட வடிவமாக இருக்கும். இது மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது போல பாண்டியர் காலத்து சதுர வடிவ சிவலிங்கம் போல இருக்கிறது என ஸ்தபதி கூறினார்.
Next Story



