குறைந்த மின் அழுத்தத்தால் கருகி வரும் பயிர்கள்

X
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரையோரம் சாலையின் இருபுறங்களிலும் சுமாா் 200 ஏக்கரில் கரும்பு, வாழை, தென்னை சாகுபடியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பகுதியில் உள்ள மின் மோட்டாா்களுக்கு அய்யனாா் கோயில் பகுதியில் உள்ள ஒரே மின் மாற்றியில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இந்த மின் மாற்றியில் அதிக இணைப்புகள் கொடுக்கப்பட்டதால், அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், மின் மோட்டாா்களை இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், மின் வாரிய அதிகாரிகள் இந்த மின் மாற்றியை இரு பிரிவாக பிரித்து, இரு நாட்களுக்கு ஒரு பகுதி என மின் விநியோகம் செய்கின்றனா். இதனால், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும் நிலை உள்ளது. சீரான மின் விநியோகம் இல்லாததால் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதனால், பயிா்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
Next Story

