பாலேகுளி கிராமத்தில் மாபெரும் கன்றுவிடும் விடும் திருவிழா.

பாலேகுளி கிராமத்தில் மாபெரும் கன்றுவிடும்  விடும் திருவிழா.
X
பாலேகுளி கிராமத்தில் மாபெரும் கன்றுவிடும் விடும் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அடுத்த பாலேகுளி கிராமத்தில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 1- ஆம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைபெற்றது.காவேரிப்பட்டனம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் கன்று விடும் விழா நடைபெற்றது இதில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில்கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், வேலூர், ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கன்றுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய கன்றுகளுக்கு முதல் பரிசாக 40,000 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 35 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், பின்னர் வந்த கன்றுகளுக்கு ஆறுதல் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.இந்த விழாவில் பாலேகுளி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் ஆர்வமுடன் கன்று விடும் திருவிழாவை காண குவிந்தனர். பாதுகாப்பு கருதி நாகரசம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story