அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பால்வினை நோய், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு,

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பால்வினை நோய், டெங்கு  ஒழிப்பு விழிப்புணர்வு,
X
வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பால்வினை நோய், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பிரச்சாரமாக கிராமம் தோறும் கிராமிய திருவிழா எறையூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பால்வினை நோய், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பிரச்சாரமாக கிராமம் தோறும் கிராமிய திருவிழா எறையூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு வாலிகண்டாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நம்பிக்கை மைய ஆலோசகர் கீதா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் அரிபாஸ்கர் முன்னிலை வகித்தார். நம்பிக்கை மைய ஆய்வக நுட்புணர். சகுந்தலா, சுகாதார கிராம சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி, ஆண்டிமுத்து சின்ன பிள்ளை அறக்கட்டளை ஆலோசகர் சரவணன், களப்பணியாளர் காந்திமதி,கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ரங்கநாதன், வாசுகி, வல்லரசு ,சின்னையன் மற்றும் சுகாதார ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஓசை கலை குழுவினர் நாடகங்கள், கரகாட்டம் ,மயிலாட்டம் ,ஒயிலாட்டம் ,மூலமாக விழிப்புணர் ஏற்படுத்தினர். முடிவில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் பழனிவேல் ராஜா நன்றி கூறினார்.
Next Story