காளியம்மன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது.

காளியம்மன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது.
காளியம்மன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைக் அரசிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூலை 16ஆம் தேதி காலை 8 மணி அளவில் காளியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகாமையில் உள்ள முள்தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தாந்தோணி மலை கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகிரிஸ்வரன் வயது 29 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர், மேலும் ரத்தினகிரீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story