ஓசூரில் மாணவி இருவர் மாயம்- போலீசார் விசாரணை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தந புகாரில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கீழ் கொல்லிப்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக்(29) மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

