ராசிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மகா சக்தி கணபதி ஆலயத்தில் ஆடி ஒன்று தேங்காய் சுடும் நிகழ்வு பக்தர்கள் தரிசனம்..

X
Rasipuram King 24x7 |17 July 2025 7:53 PM ISTராசிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மகா சக்தி கணபதி ஆலயத்தில் ஆடி ஒன்று தேங்காய் சுடும் நிகழ்வு பக்தர்கள் தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் சிபி கண்ணையா தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் ஆடி ஒன்று முன்னிட்டு விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகர் காட்சியளித்தார். இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஆடி ஒன்று தேங்காய் சுடும் நிகழ்வை முன்னிட்டு தேங்காய் எடுத்து வந்து விநாயகர் முன் உடைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோல் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி கணபதி ஆலயத்தில் கணபதிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கணபதி காட்சியளித்தார். பக்தர்கள், குழந்தைகள், பெரியோர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story
