சேதுபாவாசத்திரம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை 

சேதுபாவாசத்திரம் பகுதியில்  சனிக்கிழமை மின்தடை 
X
மின்வாரியம்
தஞ்சாவூர் மாவட்டம்,  சேதுபாவாசத்திரம் பகுதியில், மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் (ஜுலை.19) சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டிணம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், ஆத்தாளூர், பேராவூரணி சேது ரோடு,  முனீஸ்வரர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும். மேலும்,  மின்தடை பற்றிய புகார்களுக்கு மின்னகம் எண் 9498794987 என்ற எண்ணில் புகார் மற்றும் விபரங்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story