முதியவர் வலது கை கார் சக்கரத்தில் சிக்கி படுகாயம்

X
Komarapalayam King 24x7 |17 July 2025 9:42 PM ISTகுமாரபாளையம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் வலது கை கார் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
சேலம் மாவட்டம், புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 65. கட்டிட கூலி. இவர் ஓலப்பாளையம், வாய்க்கால் பாலம் அருகே சைக்கிளில், நேற்றுமுன்தினம் காலை 08:30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில், இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஆல்டோ கே. 1 என்ற கார் இவர் மீது மோதியது. இதில் இவர் கீழே விழுந்ததில், இவரது வலது கை மேல் கார் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்தார். இவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் சடையம்பாளையம், ராஜ்குமார், 45, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
