அடிக்கடி மின்வெட்டால் தொழில்கள் பாதிப்பு ஆட்கள் பற்றாக்குறையால் விரட்டப்படும் மின் பணியாளர்கள்

X
Komarapalayam King 24x7 |17 July 2025 9:47 PM ISTகுமாரபாளையம் நகரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
குமாரபாளையம் நகரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் தங்கவேல் கூறியதாவது: குமாரபாளையம் நகரில் 33 வார்டுகள், அருகில் இரண்டு ஊராட்சி பகுதிகள் உள்ளன. குளத்துக்காடு பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் டவுன், ரூரல் அலுவலகங்கள், எதிர்மேடு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி பகுதி அலுவலகம், குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதி மின் வாரிய அலுவலகம் ஆகிய நான்கு அலுவலகங்கள் உள்ளன. சுமாராக இரண்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை உள்ளது. பலத்த காற்று, மழை, மின் சாதனங்கள் சேதம், பறவையினங்கள் மின் கம்பி மீது அமர்வது, பிரதான மின் கம்பியில் மின் விநியோகம் நிறுத்தம், என்பது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இருக்கும் நான்கு அலுவலகங்களில் இருக்க வேண்டிய, பணியாளர்கள் எண்ணிகையில் நான்கில் ஒரு பங்கு தான் உள்ளனர். எதாவது மின் தடை ஏற்பட்டால், எதனால் மின் தடை ஏற்பட்டது என்று எங்களுக்கு தகவல் கிடைக்கவே சுமார் 10 நிமிடங்கள் ஆகிவிடும். அதற்குள் பல நூறு போன் கால் வந்து விடும். எந்த இடத்தில் மின் பழுது, என்பது அறிந்து, அங்கு சென்று, சரி செய்ய குறிப்பிட்ட நேரம் ஆகும். இது முடிந்தால் அடுத்த இடத்தில் மின் தடை ஏற்படும். இப்படி ஓய்வு இல்லாமல் பணி செய்திட வேண்டிய நிலை உள்ளது. மேலதிகாரிகள் ஆட்கள் பற்றாக்குறை பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு தேவை மின் விநியோகம் தடை படக்கூடாது. ஓடி, ஓடி பணி செய்வதால், ஓய்ந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதனால்தான் மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் பலி, என்ற தகவல் வருகிறது. பணிச்சுமையால் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். கொஞ்சம் அசந்தால் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. மேலும் ஆட்கள் பற்றாக்குறையால், மின் தடை அடிக்கடி ஏற்பட்டு, அதனை சரி செய்ய பல மணிநேரம் மின் விநியோகம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி, விசைத்தறி உற்பத்தி, கைத்தறி ஜவுளி உற்பத்தி, ஈ.சேவை மையங்கள், ஜெராக்ஸ் கடைகள், கணினி பயிற்சி மையங்கள், உள்ளிட்ட பல தொழில்கள் பாதிப்புக்கு ஆளாகிறது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலை ஏற்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்கள் பணிச்சுமையை குறைத்து, மிகவும் ஆபத்தான மின் வாரிய பணிகளை செய்திட போதுமான ஆட்கள் நியமித்து, எங்கள் மனச்சுமையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மாதாந்திர மின் பராமரிப்பு என்ற பெயரில் மாதம் ஒரு நாள் முழுதும் மின் தடை ஏற்பட்டாலும், மாதத்தில் பல நாட்கள் பல மணிநேரம் இது போல்தான் குமாரபாளையம் நகரில் மின்தடை ஏற்பட்டு, பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். இது போல் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டால், பொதுமக்களை ஒன்று திரட்டி, பெருமளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
