தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் பரஞ்சேர் வழியில் நடைபெற்ற

X
தமிழ்நாடு அரசின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பரஞ்சேர்வழி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் விதமாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதி களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் 325 முகாமாக நடை பெற உள்ளது. கடைக்கோடி மக்களும் அன்றாடம் அணுகும் அரசு துறையின் சேவைகளை பெறும் வகையில் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று வழங்குவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட் பட்ட பரஞ்சேர்வழி ஊராட்சியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கை மனுக்களை முகாமில் வழங்கி பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 811 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 723 மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. கருணைபிரகாஷ், காங்கயம் தாசில்தார் மோகனன், மாவட்ட ஊராட்சி செயலாளர், மாவட்ட, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story

