பெரம்பலூர் ரேசன் கடை முன் தகரத்தில் பந்தல்
பெரம்பலூர் அருகே செங்குணம் ரேசன் கடை முன் தகரத்தில் பந்தல் பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் அரிசி சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை வீட்டிலிருந்து கடைக்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதனிடையே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரேஷன் கடையின் முன்பாக மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பான முறையில் குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை பெற்று செல்ல தற்போது தகரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது இது குடும்ப அட்டைதாரர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story



