அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

X
Komarapalayam King 24x7 |17 July 2025 10:11 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. பொருளாதாரம், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி. இயற்பியல், பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. கணிதம் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் கல்லூரி மாணவர் சேர்க்கை மையத்தை அணுகி, சேர்ந்து கொள்ளலாம். குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவில், சேர விரும்பும் மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கல்லூரி குறியீட்டு எண்: 1031013. கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம் , எம்.காம் , எம்.எஸ்.சி. கணிதம், , எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் கல்லூரி மாணவர் சேர்க்கை மையத்தை அணுகி, சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
