மத நல்லிணக்க கறி விருந்து உபசரிப்பு விழா

மத நல்லிணக்க கறி விருந்து உபசரிப்பு விழா
X
திண்டுக்கல்லில் இரண்டலைப்பாறையில் ஆடி பிறப்பை முன்னிட்டு புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் கிடா வெட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மத நல்லிணக்க கறி விருந்து உபசரிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோடு இரண்டலைப்பாறை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாப்பர் கோவில் சிற்றாலயம். இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஆலய திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆலயத்தில் புனித சந்தியாகப்பர் பக்தர்களுக்கு குழந்தை வரம் வேண்டியும், குழந்தை செல்வங்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்றும் , திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெற வேண்டும் என்றும், வேலை வாய்ப்புகள் கிடைத்திட வேண்டும் என்றும் நேர்த்திக்கடன் வைத்துக் கொள்வர். பின்பு நேர்த்திக்கடன் நிறைவேறிய பின்பு பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு கிடாவை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர். நேர்த்திக்கடனாக வரக்கூடிய கிடாவை கறி விருந்து சமைத்து ஜாதி, மத, பேதமின்றி அனைவருக்கும் அன்னத்தானமாக வழங்கப்படும். இந்த கறி விருந்தில் இந்த ஆண்டு 60 கிடா,100 சிப்பம் அரிசி, 250 கிலோ வெங்காயம், 50 கிலோ கத்திரிக்காய், 100 கிலோ தக்காளி, இஞ்சி,பூண்டு ஆகியவர்களை கொண்டு சமைத்த கறி சாதத்தை கொசவபட்டி, பஞ்சம்பட்டி, கல்லுப்பட்டி, வெள்ளோடு , நொச்சி ஓடைப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் பங்கேற்றனர் .. காலை முதல் இரவு வரை நடைபெறும் அன்னத்தானமானது மத நல்லிணக்க அன்னத்தானமாக விளங்கி வருகிறது.
Next Story