ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் நாளை ஒரு பகுதி ரத்து

ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் நாளை ஒரு பகுதி ரத்து
X
சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு தினமும் காலை 6 மணிக்கு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56108) இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜோலார்பேட்டை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ஜோலார்பேட்டை-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56107) மதியம் 2.45 மணிக்கு ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் வரை இயக்கப்படாது. அதற்கு பதிலாக திருப்பத்தூரில் இருந்து ஈரோடுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story