சேலம் செவ்வாய் பேட்டை பகுதி கழக தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்

X
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வரலாற்று திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல், கனடா உள்பட வெளிநாடுகளும் பின்பற்றுகின்றன. எடப்பாடி பழனிசாமி பெய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். இந்த பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள். பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரின் கைப்பாவையாக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்று மக்களுக்கு மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவார் என்று பேசினார். கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் சுகவனம், அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

