சேலம் நெய்க்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோவில் விழாவில்

X
சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டியில் பழமையான மூங்கில் குத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவையொட்டி எருதாட்டம் நடைபெறுவது உண்டு. இதனை கொண்டாடும் வகையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அங்கிருந்து எருதுகளை பக்தர்கள் பிடித்து வந்தனர். இதில் பக்தர்கள் 19 குழுக்களாக சென்று மொத்தம் 95 மாடுகளை அழைத்து வந்தனர். பின்னர் மூங்கில்குத்து முனியப்பன் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில் மைதானத்தில் எருதாட்டம் நடைபெற்றது. முதலில் கோவில் மாடு விடப்பட்டது. பின்னர் மற்ற மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுகளின் கழுத்தின் கயிற்றை கட்டி அதை இருபுறத்திலும் வீரர்கள் பிடித்து கொண்டு ஓட விட்டார்கள். துள்ளிக்குதித்து ஓடிய போது சிலர் மாடுகளின் குறுக்கே சென்றனர். அவர்களை மாடுகள் முட்டி தூக்கி வீசியது. இதில் 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எருதாட்ட நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் கண்டு்களித்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story

