ஓரணியில் தமிழ்நாடு’ புதிய உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்

X
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் மற்றும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ புதிய உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் காடையாம்பட்டியில் நடைபெற்றது. காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட தி.மு.க. பொருளாளர் கார்த்திகேயன், ஓமலூர் தொகுதி பார்வையாளர் சுகவனம், காடையாம்பட்டி நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய அவை தலைவர் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட பிரதிநிதிகள் சிவலிங்கம், சித்தன் தூயவன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் முருகன், நகர அவை தலைவர் முத்து, பேரூராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

