ஆடி மாத பிறப்பையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை

ஆடி மாத பிறப்பையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை
X
வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத முதல் நாளன்று தேங்காய் சுடும் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை நேற்று மாநகர் முழுவதும் கொண்டாடப்பட்டன. அதன்படி நேற்று மாலை சிறுவர், சிறுமிகள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவரவர் வீட்டின் அருகில் உள்ள தெருக்களில் ஒன்றாக கூடி தேங்காய் சுட்டு கொண்டாடினர். முன்னதாக தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு தேங்காய் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து கொண்டனர். பின்னர் தேங்காய்க்குள் வெல்லம், பச்சரிசி, எள், பாசிப்பயிறு உள்பட பல்வேறு பொருட்களை நிரப்பினர். பின்னர் அதற்குள் தேங்காய் தண்ணீரை ஊற்றி அழிஞ்சிகுச்சி மூலம் துளையிட்ட தேங்காய் கண்ணில் செருகி அவற்றை தீயில் சுட்டனர். பின்னர் விநாயகர் சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.
Next Story