கோவை: ஆற்றில் துணி துவைத்தபோது யானை தாக்கி பெண் உயிரிழப்பு !

கோவை: ஆற்றில் துணி துவைத்தபோது யானை தாக்கி பெண் உயிரிழப்பு !
X
யானை தாக்கி பெண் உயிரிழந்ததில், கண்காணிப்பை தீவிர படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், குழிவயல் சராகம் பகுதியில், நேற்று ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்த செல்வி என்ற பெண், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். ஐெயசாம்ராஜ் என்பவரின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அவரது மனைவி செல்வி, வன எல்லை அருகே துணி துவைத்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக யானை தாக்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story