லாரி டிரைவரிடம் வழிப்பறி: திருநங்கை கைது

X
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமலை குமார் (வயது 39). லாரி டிரைவர். கடந்த 15-ந்தேதி இவர், பல்லடம் பஸ் நிலையம் முன்பு லாரியை நிறுத்தி சாப்பிட்டு விட்டு வந்தபோது திருநங்கை ஒருவர் இவரது செல்போனை பறித்து மோசடி செய்து ரூ.7,500 பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் திருமலை குமார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து பணம் பறித்த திருநங்கை தேஜா (25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

