கள்ளக்குறிச்சியில் மறியல்

X
கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், தமிழக ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகளின் மாவட்ட செயலாளர்கள் புஷ்பராஜ், ேஷக் ஜாகீர் உசேன், சூரியகுமார், மனோகரன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் ரஹீம், அண்ணாமலை, சம்சுதீன், அசோகன், ஏழுமலை பேசினர். தொடர்ந்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் கச்சேரி சாலையில் காலை 11:05 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள் உட்பட 215 பேரை 11:10 மணிக்கு கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
Next Story

