கோவை: நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு
வால்பாறை நகராட்சி திமுக நகர் மன்ற தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக கவுன்சிலர்களே நேற்று பொறுப்பு ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆளும் கட்சியான திமுக நகர் மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவல்லி மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சுமார் 13 திமுக நகர் மன்ற உறுப்பினர்களும் 1 அதிமுக நகர் மன்ற உறுப்பினரும் மொத்தம் 14 நகர் மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள தாகவும் அந்த மனுவை பொள்ளாச்சி நகராட்சியில் வால்பாறை நகராட்சியின் பொறுப்பு ஆணையாளர் கணேசனிடம் இரண்டு நகர் மன்ற உறுப்பினர்கள் முன்மொழிதலோடு கவுன்சிலர்கள் வீரமணி, ரவிச்சந்திரன், மகுடீஸ்வரன், அன்பரசன், செல்வக்குமார் மற்றும் பால்சாமி ஆகிய ஆளும் கட்சி திமுக கவுன்சிலர்களே இணைந்து நேரில் அளித்துள்ளனர்.
Next Story



